வளர்ப்பு நாயை நாய் எனக் கூறியதால் விவசாயி கத்தியால் குத்திக் கொலை

 
Murder

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில்  விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். 

புதுச்சேரியில் இறைச்சியில் விஷம் வைத்து 7 நாய்கள் கொலை: போலீஸார் விசாரணை |  Pudhucherry: 7 dogs poisoned to death - hindutamil.in

திண்டுக்கல் மாவட்டம் மறவபட்டி அருகே உள்ளது உலகம்பட்டியார் தோட்டம். அப்பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உறவினரான சவரியம்மாள் என்பவர், அவரது மகன்கள் வின்சென்ட் மற்றும் டேனியல் ஆகிய இரண்டு பேருடன் வாசித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை ராயப்பன்  தனது விவசாய கிணற்றில் துணி துவைத்து விட்டு  பேரனுடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சவரியம்மாள் வீட்டிலிருந்த நாய்கள் குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. இதைப் பார்த்த ராயப்பன் பேரனை பார்த்து நாய்களை விரட்ட குச்சி எடுத்து வருமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சவரியம்மாள் மகன் வின்சென்ட், ராயப்பனிடம் வாய்த் தகராறில்  ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த வின்சென்ட்டின் தம்பி டேனியலும்  ( வயது21) ராயப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர் டேனியல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதியவர் ராயப்பனின் வலது பக்கம் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ராயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார், ராயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டேனியலை போலீசார் தேடி வருகின்றனர்.