சம்பள பாக்கி கேட்டத்து ஒரு குற்றமா? மகன் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட விவசாயி

 
murder

சம்பளத்தை கேட்ட விவசாயியை மகன் கண் முன்பே வெட்டி கொலை செய்த மற்றொரு விவசாயியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வேலை செய்த சம்பள பாக்கியை கேட்டதாலும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாகவும் ஏற்பட பிரச்சனையில் ஒரு விவசாயியை வெட்டி கொலை செய்த மற்றொரு விவசாயி.கொலை செய்த விவசாயியை ஊர் பொதுமக்கள் உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலிஸார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழாக்குடி கனமூலம் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயிகள் பலவேசமுத்து மற்றும் செல்வகுமார்.இவர்கள் இருவரும் அவையார் அம்மன் கோவில் அருகே ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.இதில் இரு விவசாயிகளுக்கும் தங்கள் நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.அதைப்போல் விவசாய பணிகள் செய்த பலவேசமுத்துக்கு செல்வகுமார் பத்தாயிரம் ரூபாய் சம்பள பாக்கியும் கொடுக்க வேண்டியது உள்ளது என தெரிகிறது. இந்நிலையில் கனமூலம் புது குடியிருப்பு பகுதி சாலையில் வைத்து நேருக்கு, நேர் சந்தித்து கொண்ட இரு விவசாயிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விவசாயி செல்வகுமார் தேங்காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாளை கொண்டு பலவேசமுத்தின் மகன் கண் முன்பே பலவேசமுத்தை சரமாரியாக வெட்டி சாய்தார். 

இதனால் தலை,வயிறு என உடலில் பல பகுதிகளில் வெட்டு பட்ட விவசாயி பலவேசமுத்து சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கொலையாளி செல்வகுமாரை பிடித்து வைத்தார்கள்.மேலும் இது தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கொலையாளியான விவசாயி செல்வகுமாரை கைது செய்து விசாரனை நடத்திய பின்பு  சிறையில் அடைத்தார்கள். கொலையான விவசாயி பலவேசமுத்தின் உடலை உடற்கூர் ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சம்பள பாக்கியை கேட்டத்து ஒரு குற்றமாக கருதி விவசாயி ஒருவரை கொலை செய்த சக விவசாயின் செயல் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.