பேஸ்புக் லைவ் அதிர்ச்சி! மாஜி காதலி தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர்

 
ல்

 தனது மாஜி காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார் வாலிபர்.   இதை பேஸ்புக் லைவ் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மாதேஸ்வரா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

 தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள நாகமரை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ்.  இந்த வாலிபர்தான் பெண்ணாகரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான லட்சுமி என்ற பெண்ணைத்தான் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார்.

ஃப்

 கொலை செய்ததை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து இருக்கிறார்.   அப்போது,   என்னை கொலைகாரனாக ஆக்கி விட்டு லட்சுமி போயிட்டியா.. அந்த ஈஸ்வரன் என்னை கொலை செய்ய அனுப்பி வைத்து விட்டான்.    நீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொலை செய்ய வச்சுட்டான் என்கிறார் அந்த வாலிபர்.    பாருங்க.. இந்த கல்லை தூக்கி போட்டுத் தான் கொலை செய்தேன் என்கிறார்.மேலும்,  நான்தான் கொலை செய்தேன் என்று ஆவேசமாக கத்துகிறார்.

பேஸ்புக்கில் நேரலையாக இதை வெளியிட்டதால் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

 பின்னர் அங்கிருந்த மரம் ஒன்றில் முனிராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . இந்த கொலை மற்றும் தற்கொலை குறித்து மாதேஸ்வரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை  மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   லட்சுமியின் கணவர் ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.