“அவ என் ஆளு” முன்னாள் காதலியின் கணவரை சரமாரியாக வெட்டிய இளைஞர்

 
murder

ஆலங்குளம் அருகே முன்னாள் காதலியின் கணவரை வெட்டிப் படுகொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder


தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகேயுள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி 28 வயதுடைய கனகராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கும் அவரின் அத்தை மகள் மலையன்குளத்தைச் சேர்ந்த 21 வயது கவிக்குயில் ஆகியோருக்கும் திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் கருப்பசாமி என்ற மகன் உள்ளார். கனகராஜின் மனைவி கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் 28 வயதுடைய வெங்கடேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

கவிக்குயில் கனகராஜை திருமணம் செய்தாலும் திருமணத்திற்கு பின்னரும் வெங்கடேசுடன் தொடர்ந்து பேசி பழைய காதலை தொடர்ந்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்திப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இரு தரப்பு உறவினர்களும் இவர்களைக் கண்டித்தும் இவர்கள் காதலை விட முடியாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கவிக்குயிலைப் பார்க்க கீழக்கலங்களில் உள்ள அவரது வீட்டிற்கு வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வந்து வந்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இதையறிந்த கவிக்குயில் உறவினர்கள் வெங்கடேஷை வீட்டில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர். அப்போது கவிக்குயிலின் அண்ணன் அன்பரசு, கணவர் கனகராஜ் ஆகியோர் வெங்கடேஷ் இடது கையில் உள்ள விரல்களை துண்டாக வெட்டினர். முகத்திலும் வெட்டியதில் அவரது வலது கண் சிதைந்தது. தனது முன்னாள் காதலன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட கவிக்குயில் அருகில் இருந்த சுமார் 60 அடி ஆழ கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்தார்.

murder

தகவல் அறிந்து வந்த ஊத்துமலை போலீஸார் வெங்கடேஷை மீட்டு சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றின் உள்ளே கிடந்த கவிக்குயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதில் கவிக்குயில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனிடையை கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேஷும் கவிக்குயிலும் மலையன்குளத்தில் வைத்து சந்தித்துப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வெங்கடேஷ், தான் கைவிரல்கள் இல்லாமலும், முகத்தில் வெட்டுக் காயத்துடனும் இருப்பதால் தனக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள், எனவே கவிக்குயிலை தன்னுடன் அனுப்பி விடுமாறு உறவினர்கள் மூலம் கனகராஜூக்கு தூது அனுப்பியுள்ளார். 

மனைவி தவறு செய்திருந்தாலும் அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த கனகராஜ், அதற்கு மறுத்துள்ளார். கவிக்குயில் தன்னுடன் வருவதற்கு கனகராஜ் தடையாக இருப்பதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் வெங்கடேஷ். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் கீழக்கலங்கல் சென்று வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கனகராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கே வந்த கனகராஜின் தந்தை நடராஜனையும் அந்தக் கும்பல் வெட்டியதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்துமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரையும் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.