பிரேக்கப் செய்த காதலி.. மூச்சு விட முடியாத அளவுக்கு படுக்கை அறையில் டார்ச்சர்
பிரேசிலில் பிரேக்கப் செய்த காதலியை கடத்தி கை கால்களில் சங்கிலியால் போட்டு கட்டிவைத்து கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரேசிலை சேர்ந்தவர் 24 வயதான பெண் எமிலியானே. இவர் அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்பவரை காதலித்து வந்துள்ளார். திடீரென அவரது நடத்தை பிடிக்காததால் அய்ல்டனின் உறவை துண்டித்துள்ளார் எமிலியானே. இதனால் கோபமடைந்த அய்ல்டன், எமிலியாவை கடத்த திட்டமிட்டார். ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனைக்கு சென்ற எமிலியானேவை வழிமறித்து காரில் கடத்தி சென்ற அய்ல்டன், தனது வீட்டிற்கு அழைத்து சென்று, சிறை வைத்துள்ளார். கை, கால் கழுத்தில் சங்கிலியை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்து மூச்சுக்கூட விட முடியாத அளவுக்கு காதலியை சித்ரவதை செய்துள்ளார்.
ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக எமிலியானேவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது அய்ல்டன் வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அய்ல்டன் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றுள்ளனர். அப்போது எமிலியானே கயிறுகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்ட நிலையில் மெத்தையில் கிடப்பதைக் கண்டனர். அவரது கைகள், கால்கள் மற்றும் கழுத்து ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அவரைச் சிறைப்பிடித்து வைக்க கைவிலங்குகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் கூறினர். அவள் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், அவளது அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்குக் கேட்காமல் தடுப்பதற்காக முகத்தில் முகமூடியும் வாய்க்கட்டும் இடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எமிலியானேவை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது காதலனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

