"உடனே ஒரு பொண்ணு வேணும்" -குடித்த வாலிபர்களால் ஹோட்டல் பெண் மேனேஜருக்கு நேர்ந்த கதி

 
liquor


ஒரு ஹோட்டலில் தங்கிய வாலிபர்கள் அங்கிருந்த பெண் மேனேஜரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டனர் 

Drunk youths abuse, molest woman hotel manager in UP [Representative image]
உத்திர பிரதேச  மாநிலம் லக்னோவில் ராஜன் சோன்கர், ராகுல், ஜெய்ஸ்வால், சந்தன் ஆகிய நான்கு டீனேஜ் வாலிபர்கள் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட முடிவு செய்து அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று ரூம் போட்டனர் .அப்போது இரவு நேரத்தில் அந்த நாலு பேரும் குடித்து விட்டு அங்கிருந்த பெண் மேனேஜரிடம் சென்று தங்களுக்கு உடனே ஒரு பொண்ணு வேணும் என்று கேட்டனர் .அதற்கு அந்த பெண் மேனேஜர் அது போல் தாங்கள்  எஸ்கார்ட்  சர்வீஸ் செய்ய முடியாது என்று கூறி விட்டார் .
அதன் பிறகு அந்த நாலு பேரும் அங்கிருந்த ரூம் பையனிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்து ,அந்த பெண் மேனேஜரின் போன் நம்பரை கேட்டு ,அவருக்கு போன் செய்து தொல்லை கொடுத்தனர் .உடனே அந்த பெண் மேனேஜர் அவர்களை ரூமை காலி செய்து விட்டு போக சொன்னார் .பின்னர், அந்த பெண்  இளைஞர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு மறுநாள் அவர்கள் மீண்டும் அந்த ஹோட்டலுக்கு வந்து தகராறு செய்தனர் .இதனால் அந்த பெண் மேனேஜர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபர்களை கைது செய்தனர் ..