குடிபோதையில் மனைவியை அடித்து கொன்று கணவனும் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடிபோதையில் மனைவியை அடித்து கொன்று, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

murder

கோத்தகிரி அருகே கோழித்தொரை கிராமத்தை சார்ந்த பழங்குடியினத்தை சார்ந்தவர் ரகுநாதன்(40). அவரது மனைவி ராணி(35). இந்த தம்பதியினருக்கு சிந்து(8) என்ற பெண் குழந்தையும் ரச்சித்(14), ராஜசேகர் (10) என்ற 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான இவர் நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில், அவருக்கும் மனைவி ராணி(35)-க்கும் இடையே நேற்று இரவு கதகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆத்திரமடைந்த ரகுநாதன் கட்டையால்  மனைவி ராணியின் தலையில் தாக்கி உள்ளார். அதில் ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் ராணி இறந்ததை கண்டு அச்சமடைந்த ரகுநாதன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அது குறித்து ரகுநாதனின் குழந்தைகள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து கிராம மக்கள் கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கட்டையால் அடித்து கொன்று கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.