"டேய் லாரி ட்ரைவர் போனதும் என்னை வாரியணைக்க வாடா" -டீனேஜ் பையனோடு உறவு கொண்ட பெண்ணால் நேர்ந்த விபரீதம்

 
murder

ஒரு பெண்ணுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய தகராறில் ஒரு லாரி டிரைவர் கொலை செய்தது தொடர்பாக 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

love

தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த  காவேரி கிராஸ் குண்டு கல்லூரி பகுதியைச் சேர்ந்த 
ஒரு லாரி டிரைவர் செல்ல வேலுவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்நிலையில் அந்தபெண், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடனும் ரகசிய தொடர்பு வைத்துள்ளார். அந்த சிறுவனும் அந்த பெண்ணும் அடிக்கடி அந்த லாரி டிரைவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர் .ஒரு நாள் அந்த சிறுவனும், லாரி டிரைவரின் கள்ளக்காதலியும் தனிமையில் இருந்ததை ட்ரைவர் செல்லவேலு பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த செல்லவேலு அந்த சிறுவனை அந்த பெண்ணிடமிருக்கும் கள்ள உறவை கை விடுமாறு மிரட்டினார் .அதனால் அந்த சிறுவன் அந்த ட்ரைவர் தன்னை கொலை செய்து விடுவாரோ என்று பயந்து கொண்டே இருந்தார் .அதனால் அந்த சிறுவன் அந்த செல்லவேலுவை வெட்டி கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .பின்னர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து அந்த சிறுவனை கைது செய்தனர் .