கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் - கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்

 
m

தன்னுடன் உறவில் இருந்து வரும் கள்ளக்காதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என்கிற சந்தேகத்தில் இருந்து வந்த வாலிபர் அவரை கடற்கரைக்கு தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து  கொன்று போட்டு விட்டு வந்திருக்கிறார்.   போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் சரணடைந்திருக்கிறார்.   ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

கொத்தவலசை என்கிற பகுதியைச் சேர்ந்த பெண் ஸ்ரவானி.  27 வயதான இந்த பெண் திருமணமானவர்.  இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவருடன் தகராறு ஏற்பட்டு அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.   விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடையில் அந்த பெண் வேலை செய்து வந்திருக்கிறார்.

m

 அப்போது ஓவியர் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கோபாலும் ஸ்ரவாணியும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார்கள் . பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்துதிருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் தான் ஸ்ரவானியின் நடவடிக்கை மீது கோபாலுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது . அவர் வேறு யாருடனும் கள்ள உறவில் இருப்பதாக கோபால் சந்தேகப்பட்டு இருக்கிறார் .

வெங்கி என்பவர் உடன் பழக்கத்தில் இந்திருக்கிறார் என்று தெரிந்து அவருடன் பழகக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.  ஆனால் கோபால் சொன்னதை கேட்காமல் மெசேஜ் மூலமாகவெங்கி உடன் பேசி வந்திருக்கிறார் . இதை பார்த்து விட்ட கோபாலுக்கு ஆத்திரம் ஏற்பட்டு இருக்கிறது.  இது குறித்து அடிக்கடி  அவரிடம் கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார்.

 இதன் பின்னர் ஸ்ரவாணியை கொலை செய்து விட  முடிவு எடுத்திருக்கிறார் கோபால்.  இதனால் கடற்கரை சாலையில் கோகுல் பார்க் பகுதிக்கு ஸ்ரவாணியை அழைத்துச் சென்று இருக்கிறார்.  அங்கு சென்றதும் வெங்கியுடன் பழகுவது குறித்து பேசி இருக்கிறார்.  அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்து ஸ்ரவாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

விசாகப்பட்டினத்தில் எம். ஆர். பேட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட கடற்கரை சாலையில் இருக்கும் கோகுல் பார்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் கோபால் தானாகவே கஜுவாக நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று  தன்னுடன் குடித்தனம் நடத்தி வந்த பெண்ணை கொலை செய்து விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார்.