கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ டாக்டர் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி! அதிர்ச்சி பின்னணி

தெலங்கானாவில் டாக்டர் கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்டோர் 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த டாக்டர் சுமந்த் ரெட்டி 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரா மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டில் சங்காரெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாகப சுமந்த் ரெட்டி பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஃப்ளோரா மரியா ஆசிரியராக பணி புரியும் செயிண்ட் அந்தோணி பள்ளியில் பணி புரியும் ஒருவர் கூறியதின்படி டாக்டரை சந்தித்தார். அப்போது தைராய்டு பிரச்சனையால் குழந்தைகளை கருத்தரிக்க தடையாக இருப்பதாகவும் இதற்கு உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்யச் டாக்டர் கூறியுள்ளார். இதனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், சங்காரெட்டியில் உள்ள ஒரு ஜிம்மிற்குச் சென்றார்.
ஜிம்மில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த சாமுவேலுடன் ஏற்பட்ட பழக்கம் ஃப்ளோரா மரியா இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. அதன் பிறகு சுமந்த் ரெட்டி -மரியா தம்பதி வாரங்கலில் உள்ள ரங்கசாய்பேட்டை சமூக நலப் பட்டப்படிப்புக் கல்லூரிக்கு பணியிடம் மாற்றப்பட்டார். வாசவி காலனியில் வசித்து வந்த சுமந்த் ரெட்டிக்கு காஜிப்பேட்டையில் ஒரு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய பிறகு, சாமுவேலுடன் தொலைபேசி மற்றும் வீடியோ காலில் பேசி கொண்டிருந்த ஃப்ளோரா மரியா, கணவர் இல்லாதபோது சாமுவேல் ஃப்ளோராவின் வீட்டிற்கு வந்து அவரது வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். இது குறித்து டாக்டர் சுமந்த் ரெட்டிக்கு தெரிய வந்ததும் அவர் அவர்களைக் கண்டித்தார்.
இதனால் எப்படியாவது சுமந்தை கொல்ல வேண்டும் ஃப்ளோரா மரியா முடிவு செய்தார். சுமந்த் ரெட்டியைக் கொன்றால் காலனுடன் ஒன்றாக இருக்கலாம் என்றும், அதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று கூறி, செலவுக்காக ரூ.1 லட்சம் சாமுவேலுவிடம் கொடுத்துள்ளார். சாமுவேல் தனது நண்பரான ஆயுதப்படையில் பணி புரியும் தலைமைக் ராஜ்குமாரிடம் லர தனது திட்டத்தை கூறினார். இதனை செய்தால் ராஜ்குமாரின் சொந்த ஊரில் அவருக்கு ஒரு வீடு கட்டித் தருவதாக கூறி செலவுகளுக்கு ரூ.50,000 கொடுத்தார். இதனால் ராஜ்குமார் டாக்டர் சுமந்த் ரெட்டியைக் கொல்ல ஒப்புக்கொண்டார். அதன்படி 20 ஆம் தேதி சங்கரெட்டியில் மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சுமந்த் காரை ராஜ்குமார், சாமுவேல் இருவரும் பைக்கில் பின்தொடர்ந்தனர். பட்டுப்பள்ளியின் இருண்ட பகுதியில் உள்ள ஒரு பாலத்தை அவர்கள் அடைந்தபோது, டாக்டர் சுமந்த் ரெட்டி காரை மெதுவாக்கி மெதுவாக ஓட்டிச் சென்றார்.
அதே நேரத்தில், சாமுவேல் தன்னிடம் இருந்த சுத்தியலால் காரின் பின்புறத்தில் இருந்த இண்டிகேட்டரை அடித்தார். இதனால் சத்தம் கேட்டதும் காரை நிறுத்தி கீழே இறங்கி இண்டிகேட்டரை பார்க்க சுமந்த் சென்றார். உடனடியாக சாமுவேல் தன்னிடம் வைத்திருந்த சுத்தியலால் கண் முடிதனமாக அடித்தனர். இதில் டாக்டர் சுமந்த் மயங்கியதும் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து சென்றனர். இதில் சுமந்த் ரெட்டி பலத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மூச்சு விட சிரமப்பட்ட சுமந்தை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமந்த் வார சிகிச்சைக்கு பிறகு இறந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுமந்த் ரெட்டியின் மனைவி ஃப்ளோரா மரியா ஜிம்மில் அறிமுகமான சாமுவேலுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொள்ள திட்டமிட்டு, ஃப்ளோரா மரியா கள்ளக்காதலன் சாமுவேலுடன் அவர்களுக்கு உதவிய ஏ.ஆர். கான்ஸ்டபிள் ராஜ்குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததை தெரிந்து கொண்டு மூவரையும் கைது செய்தனர்.