"குவிந்து கிடந்த குழந்தைகளின் மண்டை ஓடுகள்" -அபார்ஷனுக்கு போன பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி

 
Baby

சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் டாக்டர் கைது செய்யப்பட்டார் 

Chalkboard - Abortion A hand writes the word "Abortion" on a chalkboard. abortion stock pictures, royalty-free photos & images

மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவில் வசிக்கும் ஒரு டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 13 வயதான பெண்ணுடன் நெருக்கமாக பழகி அவரை கர்பமாக்கிவிட்டார் .இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபரின் பெற்றோரிடம் கேட்ட போது ,அவர்கள் அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறினர் .மேலும் இது குறித்து புகார் அளித்தால் சிறுமியை பற்றி தவறான தகவல்களை பரப்பி குடும்ப பெயரை கெடுத்துவிடுவோம்'என, சிறுமியின் பெற்றோரை மிரட்டி உள்ளனர்.  அதனால் அந்த சிறுமிக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து விட்டு போலீசிலும் புகார் கூறினர் .இதனால் போலீசார் அந்த வாலிபரின் பெற்றோரை கைது செய்து  விட்டு  அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்திய போது அங்கு 11 குழந்தைகளின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் குவிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் . 
இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரேகா மற்றும் செவிலியர் ஒருவரை கைது செய்து , விசாரணை நடந்து வருகிறது.