இரண்டரை வயது குழந்தைக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி! பறிபோன குழந்தை உயிர்
ஓசூர் அருகே இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தாயின் கள்ளக்காதலனான திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்சி (24). இவரும் ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாந்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (28) என்பவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தபின் இருவரும் கீழ்பெண்ணாந்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பிரின்சி, குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு வந்து அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். சூர்யா கவுண்டன் கொட்டாய் கிராமத்திற்கு அவ்வபோது சென்று தனது குழந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி பிரின்சி அஞ்செட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் தந்தை சூர்யா குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மர்ம உறுப்பில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பிரின்சிக்கும் ஜேசுராஜபுரம் அடுத்துள்ள கோழம்பை காடு கிராமத்தை சேர்ந்த திமுகவின் அஞ்செட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான பெரியநாயகம் (40) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. பிரின்சி இல்லாத நேரத்தில் பெரியநாயகம் அந்த குழந்தையை பாலியல் தொந்தரவு செய்து தவறாக நடந்துள்ளார் என்பது போலீசாரில் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஞ்செட்டி போலீசார் திமுக ஒன்றிய நிர்வாகி பெரிய நாயகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்டம் சிறையில் அடைத்தனர்.

