விமான பணிபெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - திமுக கவுன்சிலர் கைது
விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகு பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தில் வைத்து பாலியல் ரீதியில் அத்துமீறிய பிரபாகரன் மற்றும் தியாகு மீது பணிப்பெண் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து 26ம் தேதி மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத திமுக கவுன்சிலர் பிரபாகரன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

