டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்பதில் தகராறு - இளைஞர் படுகொலை

 
டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்பதில் தகராறு - இளைஞர் படுகொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பட்டப் பகலில், கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பட்டப் பகலில், கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்ட பிரகாஷ் (30) என்பவருக்கும் டாஸ்மாக் கடையில் வரிசையில் அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அது மோதலாக முற்றியதில் கொலை நடந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தவெக உண்மை சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில், “TASMAC கடை அருகே ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர்: பிரசாத், சரவணன் மகன், வயது 31. TASMAC கடை அருகே முதலில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. பின்னர் சிறிய அளவில் கைகலப்பு நடந்தது. எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக தகவல் இல்லை. கைகலப்பின்போது அடையாளம் தெரியாத ஒருவர் இறந்தவரை தள்ளியதாகக் கூறப்படுகிறது. அவர் சாலையோர உணவகமான ஸ்வாமி டிபன் சென்டரின் கூர்மையான விளிம்புடைய பலகையில் விழுந்தார். இதனால் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்காக TASMAC கடையின் CCTV காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.