மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீர்! தேர்வில் உதவ நியமிக்கப்பட்ட ஆசிரியர் போக்சோவில் கைது

ற்றுத்திறனாளி மாணவிக்கு தேர்வில் உதவ நியமிக்கப்பட்ட ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நேற்று தொடங்கியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்களும், 7023 மாணவிகளும் மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் மொழித்தாள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கு என்று அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி அரியர் தேர்வு எழுத வந்திருக்கிறார் .
அந்த மாணவிக்கு என்று தனியறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்திருக்கிறார். அவர் பதற்றத்துடன் காணப்படுவதாக சொன்னதை அடுத்து ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத் உதவ வந்திருக்கிறார்.
தேர்வு எழுத சென்றபோது ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அந்த மாணவி தேர்வு எழுதிய பின்னர் பெற்றோரிடம் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன்பின்னர் போலீசார் மாணவி இடமும் அந்த ஆசிரியரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி இருக்கிறார்கள். விசாரணையில் அந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாற்றுத்திறனாளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதற்கு பின்னர் ஆசிரியர் ஜெகன்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.