முகத்தில் ஆசிட்டை ஊற்றி வாயில் கொசு மருந்தை ஊற்றி.. மாமியார் கொடுமையில் பார்வை இழந்த மருமகள்

 
aச்

தூங்கிக் கொண்டிருந்த  மருமகளின் முகத்தில் ஆசிட்டை ஊற்றி வாயில் கொசுவர்த்தி மருந்தை ஊற்றி சித்திரவதை செய்ததுதில் கண் பார்வையை இழந்திருக்கிறார் மருமகள்.  மேற்கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த சம்பவத்தில் மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அ

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் வசித்து வரும் முகேஷ் ராஜ் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்ற  பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் .  தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . 

அவிநாசி பகுதியில் வேலை செய்து வருகிறார் முகேஷ். மருமகள் மற்றும் மகன் முகேஷ் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார் முகேஷின் தாயார் ஆண்டாள்(55). மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை  நடந்து வந்திருக்கிறது.   மருமகள் மீது இதனால் கடும் மாத்திரத்தில் இருந்த ஆண்டாள் , மருமகளின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு  தொடர்ந்து சண்டை போட்டு வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் இன்று அதிகாலையில் கிருத்திகா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை  எடுத்துச் சென்று மருமகளின் முகத்தில் ஊற்றி இருக்கிறார் மாமியார் ஆண்டாள்.   ஆசிட் பட்டதும் கதறி துடித்து துடித்துக் கொண்டிருந்திருக்கிறார் கிருத்திகா.  அப்போது கொசு விரட்டி மருந்தையும் வாயில் ஊற்றி  கொடூரமாக கொலை செய்ய முயன்று இருக்கிறார்.

மு

 அப்போது போட்ட கிருத்திகாவின் அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர்,  குடும்பத்தினர் ஓடி வந்து கிருத்திகாவை மீட்டு இருக்கிறார்கள்.  இந்த சம்பவத்தில் முகம், கண், காது,  உடல் என்று பல இடங்களில்  ஆசிட் பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார்.  108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து உள்ளனர். அங்கு மருத்துவர்கள் கிருத்திகாவை பரிசோதித்த பின்னர் அவருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறியிருக்கிறார்கள்.  மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.  இந்த நிலையில் கிருத்திகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டாள் மீது கொலை முயற்சி  வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  அவரின் மகனிடமும் குடும்பத்தினரிடமும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள்.