கள்ளக்காதல் விவகாரத்தால் எழுந்த மோதல்! 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

 
f

கள்ளக்காதல் விவகாரத்தால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டு 9 பேர் மதுரை மற்றும் திண்டுக்கல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் மெய்யம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சூரிய பிரசாத்.  22 வயது இந்த இளைஞர் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இந்த இளைஞர் வசித்து  வரும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன 38 வயதான சுகன்யா என்பவர் உடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.  

fi

திடீரென்று சுகன்யாவுடன் பழகுவதை  தவிர்த்து விட்டு பேச்சு வார்த்தை எதுவும் இல்லாமல் கடந்த சில நாட்களாக இருந்திருக்கிறார் சூரிய பிரசாத்.  திடீரென்று சுகன்யா தன்னை திருமணம் செய்து கொள் என்று சொல்லி சூரிய பிரசாத்தை வற்புறுத்தி இருக்கிறார்.  இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 இந்த நிலையில் தான் தன் உறவினர்களிடம் சுகன்யா இது குறித்து பேசி இருக்கிறார்.  தன்னிடம் கள்ள உறவில் இருந்து  உல்லாசமாக அனுபவித்துவிட்டு இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று சொல்ல,  மதுரையில் உள்ள தனது உறவினர்களை இது குறித்து பேச கூப்பிட்டு இருக்கிறார் சுகன்யா.  அவர்கள் வந்ததும் நேற்று இரவில் சூரிய பிரசாத் குடும்பத்தினரிடம் சென்று இது குறித்து வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

 அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இதை அறிந்த நத்தம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.  அதன் பின்னர் இன்று அதிகாலையில் சுகன்யாவின் உறவினர்கள் சூரிய பிரசாந்த் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்திருக்கிறார்கள். இந்த தகராறு முற்றியபோது இரு தரப்பினரும் அருவாள், உருட்டு கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.  அதில் ஒன்பது பேர் மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  தகவல் அறிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.