சளி, தும்மலுக்காக ஆவி பிடித்த கல்லூரி மாணவி மரணம்

 
ந்

கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் சளி தும்மல் வந்தால் ஆவி பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.  அப்படித்தான் ஆவி பிடித்த ஒரு மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென்று மயங்கி விழுந்து மரணம் அடைந்திருக்கிறார் . தூத்துக்குடியில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் அடுத்த மேலசேர்ந்த பூ மங்களம் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம் . இவரின் இளைய மகள் கௌசல்யா.  18 வயதான இந்த இளம் பெண் நர்சிங் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார் . 

எ

கடந்த சில தினங்களாக கௌசல்யாவுக்கு சளி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது . சளி,  தும்மலால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலையில் அந்த அவதியுடனேயே கல்லூரிக்கு புறப்பட்டு இருக்கிறார் .  அப்போது வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்திருக்கிறார்.   ஆவி பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது.  இதில்  மயக்கம் வந்திருக்கிறது. 

 மயக்கம் வந்ததும் தன் முன்பாக இருந்த ஆவி பிடிக்கும் வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து விழுந்து இருக்கிறார்.  இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

 சம்பவம் குறித்து அறிந்த ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌசல்யாவின் பெற்றோர் மற்றும்  மருத்துவர்கள் இடமும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.