மூக்குத்தியின் எழுத்துக்கள் மூலம் துப்பு துலங்கியது! கர்ப்பிணி மாணவியை கொன்று புதைத்த காதலன் கைது

 
moo

கர்ப்பம் அடைந்த பள்ளி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த இதனால் அந்த சிறுமியை கொலை செய்து புதைத்திருக்கிறான் காதலன். விழுப்புரத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.  கடந்த ஆறாம் தேதி அன்று மாலையில் அந்த பள்ளத்தில் இருந்து ஒரு சிறுமியின் கை வெளியே தெரிந்திருக்கிறது.   அந்த வழியாக சென்ற மக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். கஞ்சனூர் போலீசார் அந்த இடத்திற்கு வந்து பள்ளத்தை தோண்டிய போது இரண்டு அடி ஆழத்திற்கு குழி தோண்டி ஒரு சிறுமியின் உடலை யாரோ புதைத்து இருப்பது தெரிய வந்தது.

 இதன் பின்னர் விக்கிரவாண்டி வருவாய் ஆய்வாளர் ஆதி சக்தி முன்னிலையில் போலீசார் குழியை தோண்டி சிறுமி உடலை வெளியே எடுத்து விசாரணை நடத்தினார்கள்.   விசாரணையில் அந்த சிறுமியை யாரோ கொன்று புதைத்தது தெரிய வந்தது .  சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் ஒதுக்கு புறமான பகுதி என்பதால் கொலை நடந்ததும் உடல் புதைக்கப்பட்டதும் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது.

a

 தடயவியல் துறையினர் வந்து அந்த சிறுமியின் உடலில் இருந்த சில தடயங்களை சேகரித்து உள்ளார்கள்.  இதன் பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.   அந்த சிறுமிக்கு நடந்த பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் மூன்று மாத கர்ப்பமாக சிறுமி இருந்ததும் தெரிய வந்திருக்கிறது .

அந்த சிறுமி அணிந்திருந்த மூக்குத்திகளில் இருந்த இரண்டு எழுத்துக்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள் .  அதன்படி கொலை செய்யப்பட்ட அந்த சிறுமி கண்ட மாணடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.   அதன் பின்னர் நடத்திய விசாரணையில் தான் அந்த சிறுமியை கொலை செய்துவிட்டு சென்னையில் தலைமுறைவாக இருந்த அகிலனையும் சுரேஷையும்  போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

 அகிலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  கண்டமானடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேளம் அடிக்க போனபோது அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .   ரெண்டு பேரும் செல்போனில் பேசி வந்தோம்.   பின்னர் காதலிப்பதாக சொன்னேன்.   கல்யாணம் செய்து கொள்வதாகவும் சொல்லி ஆசை வார்த்தை சொல்லி அழைத்துச் சென்று தனிமையில் இருந்தோம்.   இதனால் மூன்று மாத கர்ப்பமாகிவிட்டார்.    உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்தார்.

 அது மட்டுமல்லாமல் கடந்த நாலாம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி என்னை பார்க்க வந்துவிட்டார்.   தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்து தான் மாணவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் நண்பர்கள் இரண்டு பேரின் உதவியுடன் குழி தோண்டி புதைத்து விட்டு சென்னைக்கு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் .

 உடனே அகிலனை கைது செய்துள்ள போலீசார் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.