பொங்கல் விழாவில் மோதல்- ஒருவர் வெட்டிக்கொலை

 
murder murder

நாகர்கோவில் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder


நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியில் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நேற்று நடந்தது. காலை முதலே விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது சினிமா பாடலுக்கு சிறுவர் சிறுமிகள் நடனம் ஆடினார்கள். நடன நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சரலூரைச் சேர்ந்த டொம்போடிரைவர் ரமேஷ்,மணிகண்டன், முகேஷ் கண்ணன் ஆகியோரும் இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து முகேஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு ரமேசும்,மணிகண்டனும் செந்தூரான்நகரில் உள்ள முகேஷ் கண்ணன் வீட்டிற்கு சென்றனர். 

வீட்டில் இருந்த முகேஷ் கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த முகேஷ் கண்ணன் ஆத்திரத்தில் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து ரமேஷ் மற்றும் மணிகண்டனை சரமாரியாக வெட்டினார்.இதில் ரமேசுக்கு தலையில் வெட்டு காயம் விழுந்தது. மணிகண்டனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் விழுந்தனர். ரமேஷ்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரமேஷின் சகோதரர் சுரேஷ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் முகேஷ் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.