சிறுமியை கடத்தி ஒருவாரம் அறையில் அடைத்து வன்கொடுமை செய்த வாலிபர்

 
rape

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துவரில்லி 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியிலுள்ள சிறுமியை தங்கச்சாமி என்ற நியூட்டன் ( வயது 47) என்பவர், கடத்தி ஒரு வாரம் தனி அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கு விசாரணை நடத்தினர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவில், தங்கச்சாமி என்ற நியூட்டன்  குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதம் அதை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஜே. வெங்கடேசன் தீர்ப்பு வழங்கினார்.