சிக்கன் பீஸ்க்காக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
சிக்கன் பீஸ்க்காக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், மதுபோதையில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட நண்பர்களுக்குள் யாருக்கு அதிகமான சிக்கன் பீஸ் இருக்கு என சண்டை ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது. காவல்துறை அளித்த தகவல்களின்படி, உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், பெலகாவியில் உள்ள ஒரே எஃகு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுமானன சீதாராம் மற்றும் அருண் உள்ளிட்டோர் ஒரு அறையில் வசித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அவர்கள் அனைவரும் மது அருந்தி, சிக்கன் சமைத்ததாகக் கூறப்படுகிறது. சாப்பிடும்போது, அருணிடம் அதிக கோழிக்கறித் துண்டுகளைச் சாப்பிடுவது குறித்து சீதாராம் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறு வாக்குவாதமாகத் தொடங்கிய இந்நிகழ்வு, சில கணங்களிலேயே முற்றியது. போதையில் இருந்த அருண், கத்தியை எடுத்து சீதாராமின் மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அருண் மற்றும் சீதாராமனை சக நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீதாராம் உயிரிழந்த நிலையில், அருணை கைது செய்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

