தங்கையின் காதலன் என நினைத்து நாளை மாற்றி வெட்டிய கும்பல்

 
murder

தங்கையின் காதலன் என  நினைத்து ஆளை மாற்றி சரித்திர பதிவேடு குற்றவாளியை வெட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தங்கையின் காதலன் என நினைத்து  சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் சேர்ந்த லோகேஷ் என்பவரின் தங்கையை காதலிப்பதாக ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தெரிய வந்ததால், ஆத்திரத்தில் லோகேஷ் புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகர்  பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஜீவா நகர் பகுதியில்  சந்தேகத்துக்கிடமாக நடந்து சென்ற இளைஞரை தலையில் பலமாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய ஹரிஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி மீஞ்சூர் பகுதியில் இருந்து புது வண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்ததாகவும், அப்பொழுது  தங்கையின் காதலனை நினைத்து ஆளை மாற்றி வெட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தண்டையார்பேட்டையை சேர்ந்த சாமுவேல் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த  நித்தேஷ் , சுபாஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும்  இரண்டு பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.