“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

உத்திரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் காந்த்லா பகுதியில் வசிக்கும்  குர்பன் அகமது என்பவர் தனது மகனின் திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன் படி கடந்த ஞாயிற்று கிழமையன்று குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள கல்யாண மண்டபத்தில் அந்த கல்யாணத்திற்காக குழுமியிருந்தார்கள் .அப்போது அன்று மாலை மணமகன் கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருந்தார் .

அப்போது மணமகனின் உறவினர் ஒருவர் ஓடிவந்து கல்யாண மண்டபத்தின் வாசலில் மணமகனுக்கு   சீராக கொடுக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் காருக்குள் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள  நகையையும் காணவில்லை என்றார் .அதைக்கேட்டு அதிர்ச்கையடைந்த அனைவரும் மணடபத்தின்  வாசலில் வந்து பார்த்தார்கள் .அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை யாரோ திருடி சென்றதையறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் .

அதனால் கல்யாணத்திற்கு வந்திருந்த உறவினர்களை  கூட்டிகொண்டு மணமகனின் தந்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மண்டபத்திற்கு வந்திருந்தவர்களை பிடித்து விசாரித்தார்கள் .மேலும் கல்யாண மணடபத்திற்கு வந்தவர்களை சிசிடிவி கேமெரா மூலம் ஆராய்ந்து வருகிறார்கள் . இந்த சம்பவத்தால் அந்த ஊர் மக்களும் மணமக்களும் பெரும் சோகத்துடன் திருமணம் செய்து கொண்டு போனார்கள் .

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை