கன்றுக்குட்டி பாலியல் வன்கொடுமை -வாலிபர் தப்பியோட்டம்

 
க்

ரெண்டு வயது கன்று குட்டியை இரவு நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வாலிபர் .  கன்றுகுட்டியின் உரிமையாளர் அந்த வாலிபரை பிடிக்க முற்பட்ட போது அவர் தப்பி ஓடி இருக்கிறார் .  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க தேடி வருகின்றனர். 

 மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம்.   அம் மாவட்டத்தில் மலைக்காவா கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறத்தில் கன்று குட்டி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு அன்று ஒரு வாலிபர் அந்த கன்று குட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.   அப்போது கன்று குட்டியின் சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் .

ஜ்ஜ்

உரிமையாளரை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார் . அதன் பின்னர் அந்த கன்றுக்குட்டி உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த வாலிபர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் , இயற்கைக்கு மாறான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் இது குறித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை பிடிக்க தேடி வருகின்றார்.

அண்மையில் டெல்லியில்  பூங்காவிலும் ,  நடுரோட்டிலும் இரண்டு வாலிபர்கள் இரண்டு தெரு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வைரலாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது .  இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு வாலிபர் கன்று குட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.