தகாத உறவில் இருந்த தங்கையை வெட்டி கொலை செய்த தம்பி கைது!
நெல்லையில் தகாத உறவில் இருந்த தங்கையை வெட்டி கொலை செய்த வழக்கில் சித்தி மகன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை தியாகராஜ நகர் 9வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாலை (வயது 35). இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி . கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக வங்கியில் உடன் வேலை பார்க்கும் பிரபாகர் என்ற நபரை காதல் கலப்பு திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு 5 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். கலப்பு திருமணம் செய்ததால் முத்து மாலையின் குடும்பத்தினர் அவருடன் பேசாமல் இருந்திருக்கின்றனர். பிரபாகர் ஆந்திராவில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்வதால் தனியாக இருந்த முத்துமாலை தன்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் நாகராஜ் என்பவரிடம் பழகி இருக்கிறார். இந்த தகவல் பிரபாகருக்கு தெரிந்துள்ள நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். மேலும் முத்துமாலை,நாகராஜ் உடன் லிவ்விங் டுகெதர் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் இருவரும் பிரிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நெல்லை ஆழ்வார் நகரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முத்துமாலை ஒருமுறை சென்றிருக்கிறார். அப்பொழுது முத்து மாலையின் உறவினரிடம் டிரைவராக வேலை செய்யும் 19 வயது சிறுவன் இசக்கி பாண்டி என்பவருடன் முத்து மாலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக முத்துமாலை இசக்கி பாண்டிய உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. ஒழுக்கம் இல்லாத முத்துமாலையை பலமுறை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருந்தபோதிலும் கேட்காததால் நேற்று முத்துமாலை இடம் பழகும் 19 வயது வாலிபர் இசக்கி பாண்டியை முத்து மாலையின் உறவினர் தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த இசக்கி பாண்டி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக நேற்று இரவு முத்துமாலை சென்றுள்ளார் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் நேரத்தில் தங்களது பெயரை இழிவு படுத்திய மேலும் ஒழுக்கம் இல்லாமல் இருக்கும் அக்காவை அவரது தம்பியான நெல்லை சென்னல்பட்டி வாகைகுளத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது நண்பரான சிவா இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டு முன்பாக வைத்து முத்து மாலையை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தை முத்து மாலையில் 5 வயது மகள் நேரில் பார்த்துள்ளார். தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில் அனைத்து தகவலும் வெளியாகி இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் முத்துமாரி நெல்லை தியாகராஜ நகர் 9தாவது தெரு பகுதிக்கு வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார்.கொலை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற 2 வாலிபர்களும் விரைவில் காவல் நிலையத்தில் சரண் அடைவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான பழக்கத்தை கைவிட மறுத்ததால் தனது அக்காவை தம்பியே வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. முதல் கட்டமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்து மாலையின் சித்தி மகன் ஆழ்வார் மேரி பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டி, இந்த கொலை சம்பவத்திற்கு உதவி செய்தது தெரிய வந்தது. காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச்சென்ற இருவரையும் பிடிப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
......

