14 வயது சிறுமியை 3 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காதலன்!
புதுச்சேரி அடுத்த பாகூரில் 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவு செய்த காதலன், பிறகு தனது நண்பர்கள் 3 பேருக்கு, சிறுமியை விருந்து அளித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமி பாகூர் பகுதியில் இருந்தாக தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்டு உள்ளனர். பிறகு பாகூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
அதன்பேரில் விசாரணை நடத்தியதில் பள்ளி சிறுமியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாகூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து காதலன் நண்பர்களுடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியை புதுச்சேரி குழந்தைகள் மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது பாகூர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாகூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த காதலன் ஆன தனியார் கம்பெனி ஊழியர் ஆகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது கொண்ட சிறுவன் 2 பேரை கைது உள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


