17 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது! தனிமையில் இருந்தபோது நேர்ந்த கொடூரம்

 
murder murder

வீரவநல்லூரில் 17 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

murder


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை மகன் மாரிமுத்து (26). இவர் வீரவநல்லூரை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீரவநல்லூர் தனியார் மில் எதிரில் உள்ள பகுதியில் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து சிறுமியை துண்டால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை வீரவநல்லூர் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு  போலீசார் சென்ற போது சிறுமியின் உடலுடன் மாரிமுத்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாரிமுத்துவை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியுடன் மாரிமுத்து கடந்த வருடம் பழகியதால், மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமியுடன் பழகியதாக அம்பாசமுத்திரத்தைசேர்ந்த மற்றொருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களுடன் சிறுமி பழகுவதை மாரிமுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. சிறுமி மாரிமுத்துவிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார். இதனால் மாரிமுத்து சிறுமியை கொலை செய்த தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிய வந்ததால்  சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.