ஓரினச் சேர்க்கை வீபரிதம்- 5 மாத குழந்தை கொன்ற தாய்
ஓசூர் அருகே ஓரினச் சேர்க்கை வீபரிதத்தால் 5 மாத ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சுரேஷ் (38)- பாரதி (25) தம்பதிகள். இவர்களுக்கு ஆறு வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக துருவன் என்ற ஆண் குழந்தை 5 மாதங்களுக்கு முன் பிறந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இருந்ததாக மனைவி கூறியதை அடுத்து இயற்கை மரணம் எனக் கருதி குழந்தையை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் குழந்தையின் தந்தை சுரேஷுக்கு மனைவி மீது சந்தேகம் வரவே, அவருடைய செல்போனை பார்க்கும்போது தவறான போட்டோக்கள், வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போட்டோவில் இருப்பது எதிர்விட்டு சுமித்ரா (வயது 22) என்ற இளம் பெண் என்பது தெரியவந்தது. மேலும் ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது. இதை அடுத்து குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் மனைவி பாரதி மற்றும் திருமணம் ஆகாத தோழி சுமித்ரா (22 வயது) இருவரிடம் விசாரணை நடத்தி இருவரையும் கிருஷ்ணகிரி காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் குழந்தையின் உடலை நாளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

