டிராலி பேக்கில் பிரபல ஓட்டல் உரிமையாளரின் உடல் பாகங்கள்

 
t

டிராலி பேக்கில் அடைக்கப்பட்டு கிடந்த உடல் பாகங்களை மீட்டு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் அது கேரளாவின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் சித்திக் என்பது தெரிய வந்திருக்கிறது.   இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கேரள மாநிலத்தில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ஓட்டல் உரிமையாளர் சித்திக்.  இவர் திடீரென்று மாயமாகி விட்டதாக,  அவரது மகன் முதல் தங்களின் தந்தையை  கடந்த வியாழக்கிழமையில் இருந்து காணவில்லை என்று மலப்புரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,   பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பகுதியில் ட்ராலி பேக்குகள்  சந்தேகத்திற்கு இடமாக கிடந்திருக்கின்றன.

சி

 இது குறித்து தகவல் வரவும் போலீசார் விரைந்து சென்று அந்த ட்ராலி பேக்கை பிரித்துப் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.  அதில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்டு இருந்துள்ளன.   அந்த உடல் பாகங்களை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  அதன் பின்னர் அந்த உடல்  பாகங்களை வைத்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,  அது காணாமல் போன ஹோட்டல் உரிமையாளர் சித்திக் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இதன் பின்னர் சித்திக்கை கொலை செய்து டிராலி பேக்கில் உடல் பாகங்களை வைத்து அடைத்து வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,   இந்த கொலை கொலை வழக்கில் மூன்று பேர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.   இந்த கொலை மே 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதிக்கு இடையில் நடந்து உள்ளது என்பதும் தெரிய வந்திருக்கிறது.  இதை வைத்து போலீசார் நடத்தி வந்த விசாரணையில் சித்திக் ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தான் இதை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. 

 அந்த நபர்கள் தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்திருக்கிறது.  போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளிகளை சென்னையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   அவர்கள்தான் கொலையை செய்தார்களா? அப்படி கொலை செய்திருந்தால் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 பிரபல ஹோட்டல் உரிமையாளர் சித்தி கொலை செய்யப்பட்டு அவரின் உடலை வெட்டி டிராலி பேக்கில் வைத்து வீசிய சம்பவம் பாலக்காடு மற்றும் மலப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.