உணவு பரிமாற தாமதமானதால் வெறிச்செயல்- சகோதரனின் மனைவியை கழுத்தை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கொடூரன்

 
Bihar Man Beheads Sister-In-Law Over Delay In Serving Food

பீகாரில் உணவு பரிமாற தாமதமானதால் சகோதரரின் மனைவி கழுத்தை கோடாரியால் வெட்டி கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். 

Bihar Man Beheads Sister-In-Law Over Delay In Serving Food

பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டம் இமாத்பூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தர்மேந்திர குமார். இவரது மனைவி அன்ஷூ தேவி. நெல் நடவுப் பருவம் என்பதால், தேவியின் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் வயலுக்கு சென்றுவிட்டனர். தர்மேந்திர குமாரின் சகோதரரான குணால் குமார், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. அவர் திடீரென வீட்டிற்கு வந்து அன்ஷூ தேவியிடம் உணவு கேட்டுள்ளார். அப்போது தேவி தனக்கு உணவு பரிமாறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த குணால் குமார், தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 
வாக்குவாதம் முற்றிய நிலையில், அன்ஷு தேவி கோடரியால் தாக்கப்பட்டதாகவும், அவரது துண்டிக்கப்பட்ட தலையை கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தில் தொங்கிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிச் செல்லாமல் கிராம மக்கள் பார்த்துக்கொண்டதோடு, பின்னர் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்ட போலீசார், தேவியின் உடலை உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.