பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! பெங்களூருவில் அதிர்ச்சி

 
rape

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rape

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர், கடந்த ஜனவரி 19ஆம் தேதி இரவு, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். பின்னர், டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்துக்காக இரவு 11.30 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த நபர்களிடம், எலஹங்கா செல்லும் பேருந்து எங்கு வரும் என்று இப்பெண் கேட்டுள்ளார். 

இதனையடுத்து, பேருந்து வரும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று, இருவரும் அவரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர்.  இதனையடுத்து, இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.

இதன்படி, கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் கணேஷ் (27) மற்றும் சரவணன் (35) ஆகிய இருவரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர்.