"அஞ்சு நிமிஷம் அமைதியா இருந்தா ஆட்டோவிலேயே முடிச்சிடலாம்" -ஆட்டோ ட்ரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம் .

 
auto


ஆட்டோவில் தனியாக வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆட்டோ ட்ரைவரை போலீஸ் கைது செய்தது 

rape
கர்நாடக மாநிலம் யாதகிரி டவுனை சேர்ந்த 35 வயது ஒரு பெண் ,அதே பகுதியில் உள்ள பல வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் தினமும் ஒரு ஆட்டோவில் வேலைக்கு வந்து விட்டு ,வீட்டுக்கு அதே ஆட்டோவில் செல்வது வழக்கம் .இந்நிலையில் அவர் கடந்த 26-ந்தேதி வழக்கம்போல்  வேலை முடிந்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்ணிடம் ஜாடை மாடையாக பாலியல் பற்றி பேச்சு கொடுத்துள்ளார் .இதனால் அந்த பெண் அவரின் பேச்சு பிடிக்காமல் சீக்கிரம் ஆட்டோவை ஓட்டி செல்லுங்கள் அல்லது தன்னை இறக்கி விடுமாறும் கூறியுள்ளார் 

அதன் பிறகு அந்த ஆட்டோவை  ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதி வழியாக அந்த ஆட்டோ ட்ரைவர் ஓட்டி சென்றார் .பின்னர் அப்பெண்ணை அந்த ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார் .பின்னர் அப்பெண்ணை தாக்கி அதே இடத்தில் வைத்து அந்த பெண்ணை, ஆட்டோ டிரைவர் மிரட்டி  கற்பழித்துள்ளார். மேலும் இதனை தனது செல்போனில் படம்பிடித்த டிரைவர், தனது நண்பர்களுக்கும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பிறகு அப்பெண் அங்குள்ள போலீசில் சென்று புகார் கூறினார் .அப்பெண்ணின்  புகாரின்  பேரில் யாதகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும், அவரது நண்பர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.