நடந்து சென்ற நர்ஸ் -வழி மறித்த ஆட்டோ ட்ரைவர் -அடுத்து நடுரோட்டில் நடந்த விபரீதம்

 
rape


ஒரு நர்ஸை வழிமறித்து அவரின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்த ஆட்டோ ட்ரைவரை போலீசார் கைது செய்தனர் 

AUTO
தமிழகத்தின் சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 32 வயதான  விஜயா ஸ்ரீ என்ற பெண் நர்சாக பணியாற்றுகிறார் .இவர் தினமும் டூட்டி முடிந்து அந்த வழியாக நடந்து வீட்டுக்கு செல்வார் .இதை ஒரு ஆட்டோ ட்ரைவர் நோட்டமிட்டு வந்துள்ளார் .இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வழக்கம் போல வீட்டிற்கு புறப்பட்டார். இவர், சேத்துப்பட்டு குருசாமி பாலம் வழியாக நடந்து சென்றபோது, திடீரென அவரை வழிமறித்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமார் ,விஜயா ஸ்ரீ கழுத்தில் கிடந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே உஷாரான விஜயா ஸ்ரீ உதவி கேட்டு அலறி கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஆட்டோ டிரைவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் அயனாவரம் பாளையம் பிள்ளை நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமார்  என்பதும், அவர் ஆட்டோ ஓட்டியபடி பகுதி நேரமாக வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை  கைது செய்தனர்.