முதல்வர் தொகுதியில் அரங்கேறிய கொடூரம்- சூட்கேசில் தலையில்லாத ஆண் சடலம்

 
ச்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த தலையில்லாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் , நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் ஈக்கள் அதிக அளவு இருந்தது மட்டுமல்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனடியாக அங்கிருந்த ரயில் பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், 45 வயது மதிக்கதக்க நபரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் யாருடையது, அந்த நபர் எங்கு கொலை செய்யப்பட்டார் . கொலைக்குப் பின்னர் உடலை ஏன் சூட்கேஸில் அடைத்து கொண்டு வந்தனர், அதை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி நடந்ததா? அல்லது எப்போது இங்கு கொண்டுவைத்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.