நள்ளிரவில் திடீர் வாக்குவாதம்- மனைவியை இரும்புகம்பியால் அடித்துக்கொன்ற கணவர் தற்கொலை

 
p


திருமணநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் திடீரென்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்பு கம்பியால் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த கணவர் அதன் பின்னர் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் எல்லா ரெட்டி உடைய பகுதியில் வசித்து வந்த தம்பதி ஜனார்த்தனன் -பிரேமலதா .  நேற்று இரவில் ஜனார்த்தனும் பிரேமலதாவும்,   பிரேமலதாவின் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடச் சென்றிருக்கிறார்கள்.

pr

 விழா முடிந்ததும் நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கிறார்கள்.  வீட்டிற்கு மது போதையில் வந்திருக்கிறார் ஜனார்த்தன்.  போதையில் மனைவியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.  இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இந்த தகராறில் கடும் ஆத்திரமடைந்த ஜனார்த்தன் இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் . இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் பிரேமலதா. 

 இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தன் போதையில் மனைவிய அடித்துக் கொன்று விட்டோமே என்று பதறி இருக்கிறார்.  மனைவி  உயிரிழந்து விட்டதும் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து வீட்டில்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தகவல் அறிந்த  போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.