ஒரு கோடி ரூபாய் கேட்ட 2வது மனைவி - கூலிப்படை வைத்து கொன்ற முதியவர்

 
k

தனது 71 வயதில் 35 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த அந்த முதியவர் திருமணம் நடந்த ஒரு ஆண்டிலேயே மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கிறார்.   

 டெல்லியில் ரெஜோரி கார்டனில் வசித்து வந்த 71 வயது முதியவர் எஸ்.கே. குப்தா.   இவருக்கு அமித் குப்தா என்கிற மகன் உள்ளார்.   45 வயதான அமித் குப்தா,  மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.  இதனால் அவரால் இயல்பாக நடமாட முடியாத எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை .   மனைவி உயிரிழந்து விட்டதால் மாற்றுத்திறனாளி மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 71 வயதில் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

ப்

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் பூஜா என்கிற 35 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் எஸ்கே குப்தா.  ஆனால் குப்தா எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை.   இரண்டாவது மனைவி குப்தாவின் விருப்பத்திற்கு  மாறாகவே நடந்து வந்திருக்கிறார் . மாற்றுத்திறனாளி மகனையும் கவனிக்க விருப்பம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.   இதனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே பூஜா பேணியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருக்கிறார் குப்தா.

இதை தெரிந்ததும் அப்படி என்றால்  விவாகரத்து கொடுக்க தயார்.  ஆனால் ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  பூஜா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்தா,  பூஜாவை  கொலை செய்ய நினைத்திருக்கிறார்.  இதற்காக தன் வீட்டில் வேலை உதவி வேலை செய்யும் விபின்  என்பவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர் தனது நண்பரையும் சேர்த்துக்கொண்டு கடந்த புதன் கிழமை அன்று பூஜாவை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார்.  அதன் பின்னர் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது போல் கொள்ளை அடிக்க வந்த போது பூஜாவை குத்தி கொலை செய்தது போல் செட்டப் செய்து நாடகம் ஆடி இருக்கிறார்கள்.

 ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் தடயங்களை கைப்பற்றி ஆய்வு நடத்தியதில் போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் குப்தாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இதன் பின்னர் குப்தா அவரது மகன் அமீத் மற்றும் கொலையாளிகள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.