இடப்பிரச்சனையில் முதியவர் அடித்துக் கொலை! சிதம்பரத்தில் பரபரப்பு

 
murder

சிதம்பரம் அருகே இடப்பிரச்சனையில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder


சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ளது மேலகுப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவருக்கும் இறந்துபோன இவரது தம்பி குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு இவர்கள் குடும்பத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மாரிமுத்துவின் தம்பி மகன் ஆனந்தராஜ் (27) என்பவர் மண்வெட்டி காம்பை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆயிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பரங்கிப்பேட்டை போலீசார், பெரியப்பாவை அடித்து கொலை செய்த ஆனந்தராஜை கைது செய்து அவரிUம் விசாரணை நடத்தி வருகின்றனர்.