“லிவ் இன் டூ கெதர் விபரீதம்”- 8 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர்

 
“லிவ் இன் டூ கெதர் விபரீதம்”- 8 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர்

ஜெய்ப்பூரில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த துணைவரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரின் பிண்டாயகா பகுதியில் 22 வயதான பிரவேஷ் ராவத் என்ற பெண் தனது வீட்டிலிருந்து வெளியேறி, 32 வயதான கிரண் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் முதல் லிவ் இன் டூ கெதரில் வாழ்ந்துள்ளார். ராவத், கிரணின் மருமகன் என்ற முறையில் உறவினர் என்றும் கூறப்படுகிறது. பின்னர் கிரண் கர்ப்பமானார். ராவத் தினமும் வேலைக்கு செல்லும் முன் அவரது செல்போனை கிரணிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அந்தநேரத்தில் கிரண் வேறு யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதாக ராவத் சந்தேகித்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டன.

இந்நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி காலையில் ராவத், கிரணைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர் கிரணின் உடலை வீட்டிற்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதை வீட்டின் வாசற்படியை தாண்டி புல்வெளியில் புதைத்துவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குழியை தோண்டி கிரணை புதைத்துவிட்டு, மண்ணால் மூடுவதற்கு முன்பு, அவர் உடலின் மீது சுமார் 2 கிலோ உப்பை ராவத் போட்டதாகவும், சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அவர் ஒரு தொழிற்சாலையில் தொடர்ந்து வேலை செய்ததாகவும் காவல்துறை கூறுகிறது. ராவத் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை தொழிற்சாலைக்குச் சென்று தனது ஒப்பந்தக்காரரிடமிருந்து 500 ரூபாய் கடன் வாங்கிகொண்டு, ஊரைவிட்டு தப்பித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.