காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீடுபுகுந்து கத்திக்குத்தி! இளைஞர் வெறிச்செயல்

 
திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் திருவாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும், நல்லூர் பகுதியை சேர்ந்த யாக பிரியா இருவரும் வேலை செய்துவருகின்றனர். பிரியாவை கார்த்திக் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு தலை காதலாக காதலித்து, வந்த நிலையில் கார்த்திக்கின் காதலை யாகபிரியா ஏற்கவில்லை என தெரிகிறது. 

“விதவிதமா கெடுத்து ,அதை வீடியோ எடுத்து …”15 வருடமா பலாத்காரம் செய்தவருக்கு  கத்திக்குத்து

இந்நிலையில் யாக பிரியாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு செய்துவந்தது. தன் காதலை ஏற்காத காதலி யாகபிரியா யாருக்கும் கிடைக்ககூடாது என்ற எண்ணத்தில் தானும் தற்கொலைக்கு விஷம் அருந்திவிட்டு இன்று நல்லூரில் உள்ள காதலியின் வீட்டுக்கு தனது நண்பர்கள் அப்பு, ஜெய்சங்கருடன் கார்த்திக் சென்று அங்கு தகராறு செய்து உள்ளார்.

அப்போது தான்மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காதலி யாக பிரியாவை குற்ற முயற்சி செய்து உள்ளார். அதை தடுக்க சென்ற யாக பிரியாவின் சித்தி ஜோதிக்கு கழுத்தில் கத்திகுத்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே செய்யூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த செய்யூர் போலீசார் ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்திக்குத்து

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் அவர் நண்பர் ஜெய்சங்கர் இருவரையும் செய்யார் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, ஏற்கனவே விஷம் அறிந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது ஆபத்தான நிலையில், கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய அப்பு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.