விவாகரத்து செய்ததால் இளம்பெண்ணை கொன்று பீப்பாயில் அடைத்து வீச்சு

 
l

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயிலில் கடந்த 13ஆம் தேதி காலையில் பீப்பாய் ஒன்று இருந்திருக்கிறது.  அதில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை பாலித்தின் கவரால் மூடி பீப்பாயில் மூடி வைக்கப்பட்டிருந்தது.  இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  அந்தப் பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் கொலை செய்தது யார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியாததால் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் ரயில் நிலையத்தில் முன்பாக பெண் உடல் திணிக்கப்பட்டிருந்த பீப்பாயை வைத்து சென்றது தெரிய வந்திருக்கிறது.

ஃப்

 இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது . போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தமன்னா என்பதும் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு பின்னர் பாலிதீன் கவரில் சுத்தி குளிப்பாயில் அழைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.

 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கலால், தன்வீர் ,சாகிப் ஆகிய மூன்று பேர் தான் கொலை செய்து உடலை வீசியது தெரிய வந்திருக்கிறது . பிஹாரியை சேர்ந்த தமன்னா அப்ரோச் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார்.  அப்ரோச் ஒரு மாற்றுத்திறனாளி.  திருமணத்திற்கு பின்னர் கனவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் இரண்டு பேரும் பிரிந்து சென்றிருக்கிறார்கள்.  அதன் பின்னர் அப்புறம் பெரியப்பா மகனான இந்தி காப்பை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் இரண்டாவது கணவருடன் தமன்னா ஜிஹனி பகுதியில் வசித்து வந்திருக்கிறார் அப்ரோஜின் சகோதரர் நவாப் பெங்களூர் சிட்டி மார்க்கெட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.

 தனது சகோதரரை விவாகரத்து செய்துவிட்டு இந்தி காப்பை இரண்டாவது திருமணம் செய்ததால் நவாப் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.  இதனால் தமன்னாவை பழிவாங்க அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.  அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு விருந்து கொடுப்பதாக நவாப் உறவினர்கள் தமன்னாவை அழைத்திருக்கிறார்கள்.  விருந்துக்கு வந்த தமன்னா விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அவர் கழுத்தை துப்பட்டாவால் நவாப் உள்ளிட்டோர் சேர்த்து இறுக்கி கொலை செய்திருக்கிறார்கள் பின்னர் தான் பாலித்தீன் கவரில் சுற்றி பீப்பாயில் திணித்து வைத்திருக்கிறார்கள் இந்த கொலையில் எட்டு பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது 3 பேர் கைதாக இருக்கும் நிலையில் 5 வேர் தலைமறைவாக இருக்கிறார்கள் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.