அத்தையின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற இளம்பெண்

 
k

அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார் இளம்பெண்.  சொத்து தகராறில் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார் அந்த பெண்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் போரிவிலி என்கிற பகுதியை சேர்ந்தவர் சுனிதா.  37 வயதான இந்த பெண் கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்தமாக ஐந்து சால் வீடுகள் இருக்கின்றன.  

ar

சுனிதாவுக்கும் அவரின் அண்ணி குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்திருக்கிறது.   5 சால் வீடுகளில் சிலவற்றை தங்கள் பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று சுனிதாவிடம் கேட்டு அவரது அண்ணி குடும்பத்தினர் தகராறு செய்து வந்திருக்கிறார்கள்.

 இந்த தகராறு விவகாரம் தொடர்ந்து வந்த நிலையில் , சம்பவத்தன்று சுனிதாவுக்கும் அண்ணி மகள் கரிஷ்மாவுக்கும்(வயது23) இடையே இந்த சொத்து தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கரிஷ்மா கத்தியை எடுத்து அத்தை சுனிதாவை கழுத்தை அறுத்து போய் விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

 படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்கள். 

 சம்பவம் குறித்து அறிந்த போரிவிலி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கரிஷ்மாவை கைது செய்துள்ளனர்.  அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.