புதுக்காதலன் கிடைத்த சந்தோசத்தில் மாஜி காதலனை அடித்துக்கொன்ற இளம்பெண்

 
j

புது காதலன் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் பழைய காதலனை அடித்து கொலை செய்து சாலையில் வீசியிருக்கிறார் இளம் பெண்.   போலீசார் விசாரணையில் காதலன் சிக்கி இருக்கிறார்.  

 மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூர் மாவட்டத்தில் கோபால் மத் நகர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்திருக்கிறது.   போலீசார் சென்று பார்த்தபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கிடந்திருக்கிறது.   சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணையை நடத்தி வந்தனர்.

விசாரணையில் துர்காப்பூர்  பினாசிடி நாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அவினாஷ் ஜன் என்கிற 19 வயது இளைஞர் என்பது தெரிய வந்திருக்கிறது.   இளைஞரின் கைகள் கட்டப்பட்டிருந்ததால் போலீசார்  இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருந்து இருந்ததால் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   அப்போது ஆப்ரீன் கட்டுன் என்பவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதலியுடன் பின்னர் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது .

ம்

இதை எடுத்து துர்காப்பூர் மாவட்டத்தில் நைன் நகரில் வசித்து வந்த ஆப்ரீனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்திய போது தான்,  பிஜூபாராவை  சேர்ந்த புது காதலன் பிட்டு குமார் சிங்கியுடன் சேர்ந்து அவிநானுவை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் , பிட்டு குமாருடன் காதல் பழக்கம் உண்டான பிறகு அவினாசுடன் ஆன உறவை முறித்து இருக்கிறார் ஆப்ரீன். ஆனால் இது அறியாத அவினாஷ் தொடர்ந்து ஆப்பிரினை பின் தொடர்ந்து வந்து காதலித்து வந்திருக்கிறார்.   புது காதலன் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அவினாஷ் இடையூறாக இருப்பதாக எரிச்சல் பட்டிருக்கிறார் ஆப்ரீன்.   இதனால் புது காதலனுடன் சேர்ந்து அவினாசை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

 அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவிநாசை வரவழைத்து மதுபானம் குடிக்க வைத்திருக்கிறார்கள்.   அவினாசுக்கு நன்றாக போதை ஏறியதும் இரும்பு தடியை எடுத்து  காதலன் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  இதில் அவினாஷ் மயங்கி விழுந்திருக்கிறார்.   அதன் பின்னர்  புது காதலன் பிட்டு குமார் சிங் கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து அவிநாசியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  இந்த தாக்குதலில் அவினாஷ் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

 பின்னர் இருவரும் சேர்ந்து அவிநாசின் கைகளை கட்டி வைக்க சென்று தூக்கிச் சென்று தேசிய நெடுஞ்சாலை வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள்.  விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்தது அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து துர்காப்பூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.