காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை கழட்டிவிட்ட இளைஞர் கைது

 
கைது

ஜெயங்கொண்டம் அருகே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கீழசிந்தாமணி பகுதி காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(25), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தா.பழூர் பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரும் இவரது அத்தை உறவு பெண்ணான தஞ்சை மாவட்டம் நெடுங்கொல்லை பகுதி காலனி தெருவை சேர்ந்த கலைச்செல்வியும்(26) (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்) கலைச்செல்வி தனது அம்மாயி வீட்டிற்கு அம்மா பிறந்த ஊரான தாபமூர் வந்து செல்லும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் உடையார்பாளையத்தில் உள்ள கார்த்திக்கின் நண்பரில் ஒருவரான விஜய் என்பவரது வீட்டில் கலைச்செல்வியை அழைத்துச் சென்று தங்கவைத்த கார்த்திக், கலைச்செல்வியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு அதன்பின்னர், திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி இரு தரப்பு குடும்பத்தையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்து கொள்ள கூறியும் திருமணம் செய்ய கார்த்திக் மறுத்துவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.