காதலியை கொலை செய்து தீ வைத்து எரித்த இளைஞன்!
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் தனது 18 வயது காதலியைக் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் அவரது உடலை எரித்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் போடிநாயக்கனூரில் உள்ள பரமேஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த நித்யா என்பவரும் ராஜகுமாரி வட்டப்பாறை பி டிவிசனை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரும் 2023-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். பின்னர் பிரிந்துள்ளனர். திடீரென நிஷாந்த், நித்யாவைத் தொடர்புகொண்டு, தங்களது உறவு குறித்துப் பேசுவதாகக் கூறி பூப்பாராவில் தன்னைச் சந்திக்குமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அக்டோபர் 11 அன்று, மதியம் சுமார் 2:30 மணியளவில், இருவரும் பூப்பாராவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சந்தித்துள்ளனர். முதலில் இருவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது.
இநிலையில் நிஷாந்த் நித்யாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் கல்லால் பலமுறை தாக்கி அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவரது உடலுகுத் தீ வைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நிஷாந்தை காவல்துறை கைது செய்துள்ளதுடன், விசாரணை நடத்திவருகிறது.

