கொடுத்த கடனை திருப்பி கேட்ட உறவினரை கொலை செய்த வாலிபர்!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட உறவினரை அடியாட்கள் வைத்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் கோட்டவரதம்பட்டி கிராமம் வளைய செட்டியூர் பகுதியில் மனைவியை விட்டு பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வரும் விவசாயி கதிர்வேல் (42). கொங்கணாபுரம் அருகேயுள்ள கண்ணந்தேரி ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பட்டியில் வசிக்கும் அவரது உறவினரான லாரி தொழிலதிபர் தரணிஷ் (23) என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தவணையாக 30 லட்ச ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கடனை கதிர்வேல் தரணீஷிடம் திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்து அடியார்களை வைத்து கடந்த மாதம் தாக்கியதாகவும் இதுகுறித்து கதிர்வேல் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த கதிர்வேல் கடந்த 23ஆம் தேதி ஆட்டையாம்பட்டியில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு இருசக்கர ஸ்கூட்டி வாகனத்தில் சென்று விட்டு இரவில் சங்ககிரி நோக்கி வந்தவர் அரசமரம் அருகே மர்மமான முறையில் விபத்து ஏற்பட்டது போல சாலையில் கிடந்ததாகவும் அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சேர்க்கப்பட்டும் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தாகவும் அவரது உறவினர்கள் கதிர்வேலுவின் சாவில் மர்மம் இருப்பதாக மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின்னர், கதிர்வேல் உயிரிழப்பிற்கு தரணிஷ்தான் காரணம் என்று இதற்கு ஒரு நியாயம் வேண்டுமென்று கொங்கணாபுரம் அருகே உள்ள தரணிஷ் வீட்டின் முன்பு கதிர்வேலுவின் சடலத்தை ஆம்புலன்ஸிலேயே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் உயர் அதிகாரிகள் வரும் வரை எங்களது சடலத்தை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ந்து கடன் வாங்கியவரின் வீட்டின் முன்பே சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


