5 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்

 
“எண்ணெயும் கொடுத்து ,தேய்ச்சி விட பொண்ணையும் கொடுத்து…’ -ஆயுர்வேத சென்டரில் நடந்த ஆபாசம்

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி கிராமத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஐந்து வருடமாக காதலித்து கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு  ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார். அப்போது ஊர் சுற்றி  கணவன் - மனைவி போல்  உல்லாசமாக  வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அபிராமி  கூறியதற்கு திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் அபிராமியை ஏமாற்றிவிட்டு வெங்கடேசன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வெங்கடேசன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் மலர்விழி ஆய்வாளர் விசாரணை நடத்தினார். அத்திமாஞ்சேரி காலணியை சேர்ந்த  வெங்கடேசன் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் வெங்கடேசனை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.