காதலனை நம்பி லாட்ஜ்க்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 
ழ்

செங்கல்பட்டில் கள்ளக்காதலனை நம்பி லாட்ஜ்க்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பவுன்சூர் அடுத்துள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர், ஜெயராஜ்(வயது28), இவருக்கு திருமணமாகி மனைவி, 1½   வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் மேலவளம்பேட்டையில் உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். பவுன்சூர் பகுதியை சேர்ந்தவர் சுதந்திரம், இவரது மனைவி சங்கீதா(வயது32), இவருக்கு ஜோதி(வயது17) என்ற மகளும், நவீன்(வயது15) என்ற மகனும் உள்ளனர். சங்கீதா காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் செக்குரிட்டியாக வேலை செய்து வருகிறார். கணவர் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு செல்லும்போது, தன்னைவிட வயதில் இளையவரான ஜெயராஜூடன் சங்கீதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இந்த கள்ளக்காதல் விவகாரம் சங்கீதாவின் கணவருக்கு தெரிந்து அவர் கண்டித்தார். அதனால் கடந்த 5 வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாயார் வீட்டில் சங்கீதா வசித்து வந்ததாகவும், தொடர்ந்து ஜெயராஜூடன் கள்ளத்தொடர்பு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முந்தினம் மாமல்லபுரத்திற்கு ஜெயராஜூடன் சங்கீதா இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வந்த, அவர்கள் அங்குள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஜெயராஜ் மது அருந்திவிட்டு சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் ஜெயராஜ் சங்கீதாவை, நோக்கி நீ பலருடன் செல்போனில் பேசுகிறாய், பலருடைய நம்பர் என் செல்போனில் உள்ளது என, தனது நடத்தையை சந்தேகப்பட்டு கேட்டதால் சங்கீதா கோபமடைந்து ஜெயராஜூடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் தன்னை தவிர பலருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்த ஜெயராஜ், வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் சங்கீதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு இக்கொலையை தற்கொலையைாக மாற்றும் முடிவில் சங்கீதாவின் கழுத்தை சுடிதார் துப்பட்டாவால் இறுக்கி உடலை மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளார். 

பிறகு உணவு வாங்கி வருவதற்காக தான் வெளியே சென்றதாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது மின்விசியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி, விடுதி ஊழியர்களிடமும், போலீசாரிடமும் நாடகமாடி நடித்துள்ளார். இதையடுத்து அவர் கூறியதை நம்பிய போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து அவரை(ஜெயராஜ்) கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சங்கீதாவின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. 

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல்படி போலீசார் விசாரணை செய்ததில், சங்கீதாவை கழுத்தை நெறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட உண்மையை ஒத்துக்கொண்டு ஜெயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து சங்கீதாவை கொலை செய்த வழக்கில் ஜெயராஜ், கைது செய்யப்பட்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்  மேலும் இறந்த சங்கீதாவின் 2 பிள்ளைகள் அவருடைய கணவருடன் வசித்து வருவதாகவும், சங்கீதா மட்டும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வரும்போதுதான் இவர்கள் கள்ளக்காதல் நீடித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.