திருவிழாவுக்கு சென்ற பெண்ணின் வாயை பொத்தி 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை

 
k

 திருவிழாவுக்கு சென்ற பெண்ணை கடத்திச் சென்று ஏழு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம் .    

hசத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டம் மாவலி பதர் பகுதி. இப்பகுதியில் ஆண்டுதோறும் திருவிழா நடந்து வருவது வழக்கம்.  அப்படித்தான் அண்மையில் நடந்த திருவிழாவில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து பங்கேற்று உள்ளார்கள். 

 பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில்  இந்த திருவிழா நடந்து வருவதால் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.  இந்த திருவிழாவில் நாடகப் போட்டி ,சேவல் சண்டை நடந்திருக்கின்றன.  ஓவிய போட்டியும் நடந்திருக்கிறது .  பல கிராமத்து மக்கள் இந்த போட்டிகளில் பங்கேற்று சிறப்பித்து இருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த நிகழ்ச்சியில் நாடகப் போட்டி நடந்திருக்கிறது.  இதை பார்க்கச் சென்ற பெண் நாடகம் முடிந்து இரவில் தனியாக வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் .  அப்போது ஆட்கள் அதிகம் இல்லாத பகுதியில் பதுங்கி இருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் வாயைப் பொத்தி இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்   இதில் அந்த பெண் சுயநினைவை இழந்திருக்கிறார் .

பின்னர் சுய நினைவு வந்தபோது அங்கு ஏழு பேர் கொண்ட கும்பல் இல்லை.  அவர் அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் விவரங்களை சொல்லி அழுது இருக்கிறார்.   உடனே குடும்பத்தினர் தர்பா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.  அதன் பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

 போலீசாரின் தீவிர தேடலில் ஏழு பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.