குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி

 
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்துவந்த கணவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரில் உள்ள பஹ்லிம்புரா பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி குமாரி (35). இவர் கடந்த செவ்வாயன்று, 112 என்ற அவசர உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு தனது கணவரின் மரணம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது கணவர் கிருஷ்ண குமார் (36) அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்தனர். அதைத் தொடர்ந்த விசாரணையில், கிருஷ்ண குமாரை ப்ரீத்தியே கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தனது கணவர் அடிக்கடி மது அருந்தி, தன்னைத் தாக்கியதாகவும், அதனால் அவரைக் கொன்றதாகவும் ப்ரீத்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.